சென்னை

தொழிற்சங்கத் தலைவர் கோ. வேல்முருகன் காலமானார்

DIN

மூத்த தொழிற்சங்கத் தலைவர் கோ.வேல்முருகன் (67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலமானார்.
அவருக்கு மனைவி சந்திரிகா, மகன்கள் கிஷோர்நாத், பிரேம்நாத் ஆகியோர் உள்ளனர். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவராக செயல்பட்டார் வேல்முருகன். டன்லப் டயர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றியுள்ளார் அவர். மேலும், சென்னை அண்ணாநகரில் உள்ள லியோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவராகவும் தாளாளராகவும் பதவி வகித்துள்ளார். சென்னை மாதவரத்தில் உள்ள விருக்ஷா வித்யாஷரம் பள்ளியின் தலைவராகவும் உள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம். மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு...98408 37767.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT