சென்னை

5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு சேர்க்கை: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட உள்ளது.

அதனுடன் மாணவர் சேர்க்கைக்கான கட்}ஆஃப் மதிப்பெண் விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
இதில், ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 31}ஆம் தேதி முதல் ஜூன் 19}ஆம் தேதி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 2,934 பேர் சமர்ப்பித்தனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்}ஆஃப் மதிப்பெண் விவரங்களை பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது.
இந்த விவரங்களை www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT