முகப்பு
சென்னை

கட்டுப்பாட்டை மீறியதாக ரசிகர் மன்றத்தில் இருந்து ஒருவர் நீக்கம்: தலைமை ரஜினி மன்றம் அதிரடி

மன்றத்தின் கட்டுப்பாட்டை மீறியதால் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

மன்றத்தின் கட்டுப்பாட்டை மீறியதால் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: நமது மன்ற கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சைதை ரவியை மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்குகிறோம்.

இனிவரும் காலங்களில் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மற்றவர் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. இதை மீறி யாராவது அவருடன் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மன்றத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பேட்டி மற்றும் பொது விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →