சென்னை

'டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் இலக்கிய இன்பம்'

DIN

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் இலக்கிய இன்பம் என்ற இலக்கிய நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் தி.சந்தானம் பேசுகையில், மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தையும், மொழி அறிவையும் மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார்.
பொருளியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், கம்பராமாயணமும், மகாபாரதமும் தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டுகின்றன. இலக்கிய ஏட்டுக் கல்வியுடன், சான்றோர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டு கேள்வி ஞானத்தையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார். 
கல்லூரிச் செயலர் அசோக்குமார் முந்த்ரா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் ப.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT