சென்னை

அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் பரவும் டெங்கு காய்ச்சல்

DIN

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம், ஆவடி பெருநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, வெள்ளானூர் ஊராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேற்கண்ட பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. 
இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. ஆவடி பெரியார் நகரில் கடந்த 13-ஆம் தேதி கலா என்ற பெண் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். 
அவரது குடும்பத்தினரை சந்தித்த ஆவடி சுகாதார அதிகாரி, யாரேனும் கேட்டால் டெங்குவால் உயிரிழந்ததாக சொல்லவேண்டாம் என கூறிவிட்டுச் சென்றாராம். டெங்கு காய்ச்சல் பாதிப்பை மறைக்கவே அதிகாரிகள் முயலுகின்றனர். 
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குப்பைகளை அகற்றி நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT