காலமானார் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சென்னை, நங்கநல்லூர், ஜெயின் கல்லூரி காலனியில் வசித்து வந்த, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.கிருஷ்ணமூர்த்தி (93) வயது முதிர்வு காரணமாக
சென்னை, நங்கநல்லூர், ஜெயின் கல்லூரி காலனியில் வசித்து வந்த, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.கிருஷ்ணமூர்த்தி (93) வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை இரவு காலமானார்.
இவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பொது கணக்கு பிரிவில் கணக்காளராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவில் உதவி விளம்பர மேலாளராக பணிபுரிந்த குருமூர்த்தி இவரது 2-ஆவது மகனாவார்.
கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு ஆதம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு 98402 27140.