போராட்ட அச்சுறுத்தல்: எலியட்ஸ் கடற்கரையிலும் கூடுதல் பாதுகாப்பு
போராட்ட அச்சுறுத்தலின் காரணமாக, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
போராட்ட அச்சுறுத்தலின் காரணமாக, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சில அமைப்பினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (மே 1) போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தவிர்த்து, பிற வழிகளிலும் அந்த அமைப்பினர் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றன.
இதன் விளைவாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்துவதற்கு, அந்த அமைப்பினர் எலியட்ஸ் கடற்கரையில் திரண்டால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போராட்டக்காரர்களை உடனடியாக கைது செய்யவும் கூடுதல் பாதுநகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எலியட்ஸ் கடற்கரையில் வழக்கமாக 20 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். போராட்ட சூழல் விளைவாக, அங்கு சுமார் 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இன்னும் அதிகமான போலீஸார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.