சென்னை

தேசபக்தி நிரந்தரமாக இருக்க வேண்டும்: துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

DIN


தெய்வ பக்தி போல் தேசபக்தி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று இந்திய இளைஞர் சங்கத் தலைவரும் துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி கூறினார்.
இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. எஸ்.குருமூர்த்தி முன்னிலையில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் குருமூர்த்தி, தேசபக்தியே ஒவ்வொரு நாட்டுக்கும் உணர்வு ரீதியான அடிப்படை. இந்த நாட்டையும் மக்களையும் இணைக்கும் முக்கியமான நாளாக விடுதலை நாள் இருக்கிறது. எப்படி தெய்வபக்தி மனநிலை நிரந்தரமாக இருக்கிறதோ அதே போல் தேசபக்தியும் நிரந்தரமாக இருக்க வேண்டும். தெய்வபக்தி எப்படி விழாவாக வெளிப்படுகிறதோ, அதேபோல் சுதந்திர தினமும் இருக்க வேண்டும். சுதந்திர தினத்தில் மட்டும் இருப்பது தேசபக்தி அல்ல என்றார்.
இந்திய இளைஞர் சங்கத் துணைத் தலைவர் வி. முரளி, மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், இந்திய இளைஞர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் எஸ்.ராஜரத்தினம், ஜி.நாராயணசுவாமி, ஜி.சுப்ரமணியன், கெளரவச் செயலர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT