சென்னை

உயிரிழப்பைத் தவிர்க்க தலைக்கவசம் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

DIN


சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க அனைத்து வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிவது அவசியம் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
வாகன ஓட்டிகள் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் தொடங்கி வைத்தார். 
அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதத் தொகைக்கான ரசீதை அவர்களிடம் கொடுத்தனர். இதையடுத்து அந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், தலைக்கவசம் ஆகியவற்றை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா வழங்கினார். 
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நிகழாண்டில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்துகளில் 726 பேர் உயிரிழந்தனர். அதில் 98 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியவில்லை. விலை மதிப்பில்லாத உயிரைப் பாதுகாக்கும் வகையில் வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்றனர். சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT