சென்னை

40 சதவீத புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடே காரணம்: டாக்டர் வி.சாந்தா

DIN

நமது நாட்டில் 40 சதவீத புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடே காரணம் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர் சாந்தா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: புற்றுநோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணம். 40 சதவீத புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடே முக்கியக் காரணம். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு மறு வாழ்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதற்கான தொகையைச் செலவழிக்க முடியாத நிலையில் பெரும்பாலானோர் உள்ளனர் என்றார். 

ஜனவரி 7-இல் மாரத்தான்: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, நெவில் எண்டவர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கும், கட்டடத்துக்கும் நிதி திரட்டும் வகையில் 'டான் டு டஸ்க்-2018' என்ற மாரத்தான், சைக்கிள் ஓட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது என்றார்.

மாரத்தானுக்கான விளம்பரத் தூதரும், நடிகருமான அரவிந்த்சாமி, ஜிஆர்டி ஹோட்டல்ஸ் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் கோட்டா, நெவில் எண்டவர்ஸ் அமைப்பின் நிறுவனரும், அறங்காவலருமான நெவில் ஜே பிலிமோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT