சென்னை

திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது சாயம் ஊற்றப்பட்டதால் பரபரப்பு

DIN

சென்னை அருகே திருவொற்றியூரில் பொதுமக்களால் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை மீது வண்ணச் சாயம் ஊற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகேயுள்ள திருவொற்றியூர் கிராமத் தெருவில் அம்பேத்கர் சிலை உள்ளது. மார்பளவு கொண்ட இந்தச் சிலையை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைத்துள்ளனர். சிலையின் மேற்பகுதியில் கம்பிவலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தச் சிலையின் மீது வியாழக்கிழமை காலை சிவப்பு நிற வண்ணச் சாயம் ஊற்றப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அந்தப் பகுதியில் பரவியதும், அம்பேத்கர் சிலை முன்பு பொதுமக்கள் குவியத் தொடங்கினர். மேலும் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சசாங்சாய் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து சிலையின் மீது ஊற்றப்பட்ட சாயத்தை அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT