இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோரிக்கைகள்: முதுநிலை மருத்துவப் படிப்பில் நிகழ் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில், உரிய சலுகை மதிப்பெண்ணை வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அவரசச் சட்டத்தை வரும் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஈட்டிய விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு எடுத்த அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் முழு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.