தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு துவக்கம்
தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அண்மையில் வெளியிட்டார்.
புதிய திட்டங்களை செயல்படுத்துதல், அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ளும். இந்தக் குழுவின் தலைவராக, பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் (நீர்வள ஆதாரத் துறை) எஸ்.எஸ்.ராஜகோபால் இருப்பார். ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் (நீர்வள ஆதாரத் துறை) ராம பழனியப்பன், பி.வி.சீனிவாச ராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என தனது உத்தரவில் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.