சென்னை

தேர்வு முடிவுகள்: ஆலோசனை மையங்களுக்கு 15,000 அழைப்புகள்

DIN

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசின் ஆலோசனை மையங்களுக்கு ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் அழைப்புகள் வந்தன.
தமிழக அரசின் "104' மருத்துவ சேவை மையம், பள்ளிக் கல்வித் துறையின் "14417' ஆலோசனை மையம் ஆகியவற்றுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு தொடர்பான அழைப்புகள் வந்தன.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இரண்டு சேவைகளையும் அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறியது: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மையத்துக்கு 10,000-த்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. 
அவற்றில் பெரும்பாலும் அடுத்து என்ன படிக்கலாம், படித்த உடன் வேலைவாய்ப்பை தரும் படிப்புகள் ஆகியவை குறித்தே அதிக அளவில் இருந்தன. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்கள், பெற்றோரிடம் இருந்தும் அழைப்புகள் வந்தன.
ரேங்க் முறை கைவிடப்பட்டுள்ளதால் மாணவர் மீதான அழுத்தம் குறைந்துள்ளதுடன், ஆலோசனை மையங்களுக்கு வரும் அழைப்புகளிலும் வேறுபாடுகள் காணப்பட்டன. சில மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அழைத்தனர்.
பெறப்பட்ட அழைப்புகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுக் கல்வி குறித்த ஆலோசனைகள், அடுத்து என்ன படிக்கலாம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு அளிக்கப்பட்டது. 
104 மருத்துவ சேவை மையத்துக்கும் தேர்வு முடிவுகள் தொடர்பாக சுமார் 5,000 அழைப்புகள் வந்தன என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT