சென்னை

இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

DIN


பொய் புகாரின் பேரில் இளைஞரைத் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சென்னையை அடுத்த மாதவரத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாதவரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் அளித்த பொய் புகாரின்பேரில், புழல் காவல் நிலைய ஆய்வாளர் பாபு ராஜேந்திர போஸ், உதவி ஆய்வாளர் மணி உள்ளிட்டோர் என்னை கடந்த 2013 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 -ஆம் தேதி புழல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னை நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கியதுடன் என்னுடைய நகைகளையும் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்தனர். என்னை தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பாபு ராஜேந்திர போஸ், மணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ரஜினிகாந்த் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் பாபு ராஜேந்திர போஸ், மணி ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை அவர்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, நான்கு வார காலத்துக்குள் ரஜினிகாந்துக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT