சென்னை

கஜா புயல்: உதவிக்கு கடற்படை தயார்

DIN


கஜா புயல் வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்கு கடற்படை தயாராக உள்ளது.
இதுதொடர்பாக கடற்படையின் கிழக்குப் பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி அளிக்க ஏதுவாக ரன்வீர், கஞ்சார் என்ற இரு கடற்படைக் கப்பல்கள் நிவாரணப் பொருள்களுடன் தயார் நிலையில் உள்ளன.
இவற்றில் மக்களை மீட்பதற்கான உபகரணங்கள், மருந்து பொருள்கள், மருத்துவர்கள், 
சிறியரக ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள், உணவு, தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்கள், துணிகள், போர்வைகள் போன்றவை அடங்கும்.
மேலும் தேகா, ராஜாளி, பருந்து ஆகிய விமானப் படைத்தளங்களில் மீட்புக்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படை அதிகாரிகள் ரோந்து பணிகளின்போது அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT