சென்னை

சென்னையில் சூரிய ஒளி சிகிச்சை 

DIN

இயற்கையின் மகத்துவத்தை விளக்கும் வகையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரிய ஒளி கிசிச்சையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
தேசிய இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) முதல் சனிக்கிழமை வரை (நவ.24) வரை இயற்கை மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் தொடக்கமாக மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் சூரிய ஒளி சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1,000 பேர் பங்கேற்பு: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரிய ஒளி சிகிச்சையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, இயற்கை மருத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி, கருத்தரங்கு நடைபெற்றன. பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவுகளும் வழங்கப்பட்டன.
இன்று இயற்கை மூலிகை உணவு சிகிச்சை: இரண்டாம் நாளான திங்கள்கிழமை இயற்கை மூலிகை உணவு சிகிச்சை, செவ்வாய்க்கிழமை மண் குளியல் சிகிச்சை, புதன்கிழமை நிற சிகிச்சை, வியாழக்கிழமை நீர் சிகிச்சை, வெள்ளிக்கிழமை அக்குபஞ்சர், ஆற்றல் மருத்துவ சிகிச்சை, சனிக்கிழமை மசாஜ் சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட உள்ளன. மேலும், நோய்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்: அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணவாளன் கூறியதாவது:
சூரிய ஒளி சிகிச்சை, மண் குளியல் சிகிச்சை, நிற சிகிச்சை, மசாஜ் சிகிச்சை ஆகியவை முழுக்க இயற்கையின் துணை கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளாகும். 
இன்றைய காலகட்டத்தில் வெளியில் செல்லும்போது, அழகுசாதன களிம்புகள் தடவிக் கொள்வது, உடல் முழுவதும் சூரிய ஒளி படாதபடி துணியால் மூடிக் கொள்வது, பகலில் வெளியே வராமல் இருப்பது போன்ற காரணங்களால் வைட்டமின் டி, கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
இதன் காரணமாக தோல் வியாதி உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஒளி சிகிச்சை, மண் குளியல் சிகிச்சை ஆகியவற்றால் தூக்கமின்மை, அஜீரணக் கோளாறு, உடல்பருமன், ஹார்மோன் குறைபாடு பிரச்னை, தோல் வியாதிகள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்படுவதுடன், உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்றார்.
புத்துணர்வை ஏற்படுத்திய சிகிச்சை: இதுகுறித்து சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் கூறும்போது, "தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலும் இரவுப் பணி என்பதால் பகல் முழுவதும் தூங்குவதற்கே நேரம் சரியாக உள்ளது. 
இதனால், வைட்டமின் "டி'  குறைபாடு ஏற்பட்டு தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டன. அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் மண் குளியல் கிசிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, நிற சிகிச்சை காரணமாக பக்க விளைவுகள் ஏதுமின்றி எனது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சிகிச்சையால் நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கிறது' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT