முகப்பு
சென்னை

அடிப்படை வசதி இல்லாத குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள்: வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ்

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து 4

Updated On : 9 அக்டோபர் 2018, 4:21 am IST
பகிர்:


சென்னையை அடுத்த பெரும்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நகர்ப்புறத்தில் இருந்து மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்கான தகவல் மையத்தைச் சேர்ந்த வெனசா பீட்டர் அண்மையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகரின் கூவம் உள்ளிட்ட நதிக் கரையோரங்களில் வசித்த மக்களுக்கு பெரும்பாக்கம், நாவலூர், குடப்பாக்கம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இந்தக் குடியிருப்புகளின் நிலை மிகமோசமாக உள்ளது. மேலும், பள்ளிக் கூடங்கள், நியாயவிலைக் கடைகள், மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
நோட்டீஸ்: இந்த மனுவை மாநில மனித உரிமை நீதிபதி டி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், இது தொடர்பாக தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.