மகளிர் விடுதிகளை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய அரசு உத்தரவு
சென்னையில் உள்ள மகளிர் விடுதிகளை உடனடியாக ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மகளிர் விடுதிகளை உடனடியாக ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண்கள் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை Tamil Nadu Hostels and Homes for Women and Children Regulation Act (தமிழ்நாடு விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லம் ஒழுங்குமுறை சட்டம்) 2014-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்கள், நலன் மற்றும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள மகளிர் விடுதிகளை உடனடியாக ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை இணையதளம் வாயிலாக Tamil Nadu Hostels and Homes for Women and Children Regulation Rules, 2014 என்ற தரவிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் விடுதிகளை நடத்துவோர் மீது பிரிவு 20 (2) -ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செய்தி வாயிலாக வரப் பெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் பணிபுரியும் விடுதிகள் இது தொடர்பான மேல் விவரங்களை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.