நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!
நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால் மீண்டும் நியமனம்
நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக, காங்கிரஸ் எம்.பி.யான கே.சி. வேணுகோபால் தொடர்ந்து நீடிப்பார் என்று மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுக் கணக்குக் குழு என்பது அரசாங்கச் செலவினங்களை ஆய்வு செய்வதற்கும், நிதிப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் பொறுப்பான நாடாளுமன்றத்தின் ஒரு முக்கிய நிலைக் குழுவாகும்.
இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளை இக்குழு ஆய்வு செய்கிறது; பொதுப் பணம் திறமையாகவும், அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களுக்கு ஏற்பவும் செலவிடப்பட்டுள்ளதா என்பதில் கவனம் செலுத்துகிறது.
Advertisement
Advertisement
இக்குழுவில் மக்களவையைச் சேர்ந்த 15 பேர் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 7 பேர் உள்பட மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர்.
2026 - 2027 ஆண்டுக்கான குழுவின் தலைவர் என்ற முறையில், அரசாங்க வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தணிக்கை அறிக்கைகளின் குழு ஆய்வுக்கு கே.சி. வேணுகோபால் தலைமை தாங்குகிறார்.
பல்வேறு அமைச்சகங்களில் நிகழும் வீண் செலவினங்கள், நடைமுறைக் குறைபாடுகள், நிதி முறைகேடுகளை மதிப்பிடும் கலந்துரையாடல்கள், விசாரணைகள், கண்டறிதல்களை அவர் மேற்பார்வையிடுவார்.
Congress MP K C Venugopal reappointed Parliament’s Public Accounts Committee chairman for 2026–27
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.