சென்னை

ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு தலைவர் பேச்சு

DIN


ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு தலைவர் டாக்டர் ஈஸ்வர ரெட்டி தெரிவித்தார்.
சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்,  அந்நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம், துணை வேந்தர் டாக்டர் பி. விஜயராகவன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற  29-ஆவது பட்டமளிப்பு விழாவில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்த 452 பேருக்கு பட்டங்களை வழங்கியும், சிறப்பிடம் பெற்ற 22 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கியும் டாக்டர் ஈஸ்வர ரெட்டி பேசியதாவது:
தற்போது உலக நாடுகளின் மருந்து தேவையில் 20 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு மருந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைந்துள்ளது.  நாட்டில் 6,500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் தேவைப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை அந்த நிறுவனங்களே விநியோகிக்கின்றன.
ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது. அவற்றை ஒழுங்கு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மருந்துகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை ஆய்வு செய்யும் மையங்கள் நாடு முழுவதும் 250 இடங்களில் உள்ளன. பெரும்பாலும் மருத்துவக் கல்லூரிகளில்தான் அவை அமைந்துள்ளன. அந்த கல்லூரிகள் அனைத்தும் எதிர் விளைவுகள் குறித்த தகவல்களை எங்களுக்கு விரைந்து அனுப்பினால் பாதுகாப்பான மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும் என்றார்  டாக்டர் ஈஸ்வர ரெட்டி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT