சென்னை

நஷ்டத்தில்  இயங்கும் ஐஓபி கிளைகளின் எண்ணிக்கை குறைந்தது

DIN

2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, நஷ்டத்தில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 157 ஆக குறைந்துள்ளது.
 இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே.ஸ்ரீ வத்சவா கூறியது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த கிளைகளில் 25 சதவீத கிளைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து தற்போது நஷ்டத்தில் இயங்கும் கிளைகளின் எண்ணிக்கை 157 ஆக உள்ளது. 
வாடிக்கையாளர் சேவையை பாதிக்காத வகையில் வங்கிக் கிளைகளை இணைப்பது, பணியாளர்களைத் தேவைக்கேற்ப பணியில் அமர்த்துவது போன்ற பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் இந்த எண்ணிக்கையை அடைய முடிந்தது. 
மேலும் நஷ்டத்தில் இயங்கும் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே, ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வங்கி லாபம் ஈட்டுவதற்கான காரணம். அடிமட்ட நிலையில் இருந்து லாபத்தை ஈட்டுவதே வங்கியின் குறிக்கோள். நஷ்டத்தில் இயங்கும் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையே வங்கியின் முயற்சி வெற்றி அடைந்து வருவதற்கான சான்று என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT