சென்னை

நாளை சைவ கிரேவி வகைகள் தயாரிப்புப் பயிற்சி

DIN


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், சைவ கிரேவி வகைகள் தயாரிப்பு தொடர்பாக ஒருநாள் பயிற்சி புதன்கிழமை (ஆக.14) கிண்டியில் நடைபெறவுள்ளது.
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சைவ கிரேவி வகைகள் தொடர்பாக ஒருநாள் பயிற்சி ஆகஸ்ட் 14-ஆம் தேதி  நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் எட்டு விதமான கிரேவி வகைகள் மற்றும் நான், பரோட்டா, ருமானி ரொட்டி போன்றவை கற்றுத்தரப்படும். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-22250511 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என  இந்த மையத்தின் தலைவர் ஆ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT