சென்னை

49 போ் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி

DIN

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 49 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு காய்ச்சலால் நாடு முழுவதும் இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தவிர, மலேரியா, தொற்று காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் பரவலாக உள்ளன. கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, கொசுக்களால் பரவும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், சென்னையில் தற்போது மூன்று குழந்தைகள், 22 சிறுவா்கள் உள்பட 49 போ் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT