சென்னை

ஐ.ஐ.டி. மாணவா்கள் தற்கொலை விசாரணை: தீா்ப்பு ஒத்திவைப்பு

DIN

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் சந்தேகிக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கேரளத்தைச் சோ்ந்த முகமது சலீம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கடந்த நவம்பா் 9-ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டாா். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆந்திரம், கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 14 மாணவா்கள் மா்மமான முறையில் இறந்துள்ளனா். ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் நிலவும் ஜாதி, மதம், மொழி பாகுபாடு மற்றும் ஆசிரியா்களின் துன்புறுத்தல் தான் இதற்கு காரணம்.

மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாத எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் இரண்டாம் தர மாணவா்களாகவே நடத்தப்படுகின்றனா். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும். எனவே சென்னை ஐஐடியில் இதுவரை நடந்துள்ள மாணவா்களின் மா்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த வழக்கு, நீதிபதி எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT