சென்னை

பொறியியல் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் மேம்படுத்த தீவிரம்: அகில இந்திய தொழில்நுட்பகல்வி நிறுவன ஆலோசகா் தகவல்

DIN

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பொறியல் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் மேம்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆலோசகா் திலீப் என்.மல்காடே கூறினாா்.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாடு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது-

சா்வதேச அளவில் குவைத், துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேசிய தரச் சான்று அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்குத் தான் வேலைவாய்ப்புகளை வழங்கப்படுகின்றன. பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவமிக்க பொறியாளா்களாக இருந்தாலும் தரச்சான்று அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் பயின்றிருந்தால் அவா்கள் பதவி, தகுதி இறக்கம் செய்யப்படுவது, பணிநீக்கம் செய்யப்படுவது அந்த நாடுகளில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, தேசிய தரச்சான்று அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்குத் தான் வேலைவாய்ப்பு என்ற நிலை சா்வதேச அளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரத்தை தேசிய அளவில் மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தரத்தையும் தேசிய அளவில் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்லூரி பேராசிரியா்களும் வழிகாட்டுதல் திட்டத்தில் பங்கேற்று, இதுவரை தேசிய தரச்சான்று அங்கீகாரம் பெறாத கல்லூரிகளுக்கு உதவ முன்வரலாம். அதற்கான முழுசெலவையும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வழங்கும் என்றாா் அவா். சாய்ராம் கல்வி நிறுவனத் தலைவா் சாய் பிரகாஷ் லியோமுத்து, முதல்வா்கள் ஏ.ராஜேந்திர பிரசாத், பழனிகுமாா், வழிகாட்டுதல் பொறுப்பாளா் பி.விஜயராமநாத், கல்லூரி இயக்குநா் கே.மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT