சென்னை

"நபார்டு வங்கியின் இ- சக்தி திட்டம்: 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ' 

DIN

நபார்டு வங்கியின் இ- சக்தி திட்டம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அதன் மண்டல தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தெரிவித்தார்.
 தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின்( நபார்டு) 38-ஆம் ஆண்டு தொடக்கவிழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் இதயம்போன்று நபார்டு வங்கி செயல்படுகிறது. 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நபார்டு வங்கியை மனதார பாராட்டுகிறேன் என்றார் அவர்.
 விழாலில், நபார்டு வங்கி தமிழக மண்டல தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் பேசியது: கடந்த நிதியாண்டில், நபார்டு சார்பில், ரூ.11,324.74 கோடிக்கு முதலீட்டுக் கடன்களும், ரூ.4,425.10 கோடிக்கு குறுகிய காலக் கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. 1,111கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ரூ.2,185 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.18 கோடியும் கடனுதவி வழங்கியுள்ளது. 2018-இல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த முக்கொம்பு அணையை சீரமைக்க ரூ.368 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் கணக்கு வழக்குகளை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் இ-சக்தி என்ற நபார்டின் திட்டம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது என்றார் அவர்.
 விழாவில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிலவற்றின் வெற்றிக்கதைகள் அடங்கிய புத்தகத்தையும் , தேனீ வளர்ப்பு குறித்த கையேட்டையும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தின் கீழ் சாதனை புரிந்த வங்கிகளுக்கு விருதுகளையும் வழங்கினார். விழாவில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பத்மஜா சுந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT