சென்னை

எருமையூரிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி தொடக்கம்

DIN

சென்னை தாம்பரத்தை அடுத்த எருமையூர் கல்குவாரிகளில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கும் பணியை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.
சென்னையில், குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கல்குவாரி நீரை சுத்திகரித்து விநியோகிக்கும் பணியில்  வாரியம் ஈடுபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாம்பரம் அருகே எருமையூரில் உள்ள ஐந்து கல்குவாரிகளில் இருந்து தண்ணீர்  எடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, ரூ.19.17 கோடி மதிப்பீட்டில் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரு வார சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் தற்போது விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கல்குவாரி குட்டைகளில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர்  செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நெற்குன்றம், மதுரவாயல், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்தத் தண்ணீர் விநியோகிக்கப்பட உள்ளது. தினமும் ஒரு கோடி லிட்டர் வீதம் 60 நாள்களுக்கு, இந்த கல்குவாரி நீர் கைகொடுக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT