சென்னை

வேளச்சேரியில் குழாய் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் போராட்டம்

DIN


சென்னை வேளச்சேரி நேரு நகரில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் புதைவட கேபிள் கம்பியைப் புதைக்க  பள்ளம் தோண்டியபோது, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாய்களுக்குள் சாக்கடை நீர் புகுந்தது.  இதனால் நேரு நகரில் உள்ள வீட்டுக் குழாய் இணைப்புகளில் திங்கள்கிழமை துர்நாற்றத்துடன் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர், கழிவுநீர் குழாய் சேதத்தைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட நேரு நகர் பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT