சென்னை

ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN


ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை  கைவிடக் கோரி ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.), தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) ஆகிய இரண்டு சங்கத்தினர் சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் கூறியது:  ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.முதற்கட்ட நடவடிக்கையாக இரண்டு ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. 
இதுபோல, ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனி பெரு நிறுவனமாக மாற்றவும் முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், ரயில்வே வாரிய உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.   இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்  என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT