சென்னை

பெண் பயணிகள்  பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு

DIN


ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் குறும்படத்தை  தமிழக ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக ரயில்வே காவல் துறை சார்பில், ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில்  பெண் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான குறும்படம் அண்மையில் வெளியிட்டப்பட்டது. இதில், ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் பெண்ணை இரண்டு பேர் பின்தொடர்வதும், அவர் ஜி.ஆர்.பி.செயலி மூலமாக  போலீஸாருக்கு தகவல் அனுப்புவதும், உடனே ரயில்வே காவலர் வந்து அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன்பிறகு, இந்த குறும்படத்தில்  தமிழக ரயில்வே காவல்துறை  டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு விவரம்: ரயில் பயணிகள்,பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ரயில்வே காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரயில் நிலையத்தில், ரயில்களில்  பெண்களுக்கு ஏதாவது பாதுகாப்பு குறைவு என்று கருதினால், 1512  என்ற உதவி எண்ணில் அழைக்கலாம். எல்லா ரயில் நிலையத்திலும் ரயில்வே காவலர்கள் இருப்பார்கள். உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்றார் அவர். 
பெண் பயணிகள் பாதுகாப்புக்காக எதட ட்ங்ப்ல் ஹல்ல் என்ற செயலியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இதை பதிவேற்றம் செய்து பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம் என அந்த குறும்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT