சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைத்த 3 நிறுவனங்கள் மீது வழக்கு

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி, அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைத்த 3 தனியார் நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

DIN

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி, அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைத்த 3 தனியார் நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. 
இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்தனர்.  இதையொட்டி செல்லிடப்பேசி சேவை பாதிக்காமல் இருப்பதற்காக, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பகுதியில் 3 தற்காலிக செல்லிடப்பேசி கோபுரங்களை சில நிறுவனங்கள் அமைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த செல்லிடப்பேசி கோபுரங்களை வைக்க மூன்று தனியார் நிறுவனங்களும் அனுமதி பெறவில்லையாம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் போலீஸார், தற்காலிக செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT