சென்னை

சென்னை குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு

DIN


சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
இதையடுத்து சனிக்கிழமை காலை முதல் ஏரிக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.  டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 
இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். தற்போது ஏரியில் 45.45 அடி தண்ணீர் உள்ளது. சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. 
இதற்கிடையே சென்னையில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம், வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வருகிறது. வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இந்தநிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஏரிக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT