சென்னை

ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது

DIN

ரயில்களில் பெண் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 8 பவுன் நகை, ரூ.46,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்லிடப்பேசிகள், நகைகள், பணம் ஆகியவை தொடா்ந்து திருடு போவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. எழும்பூா் ரயில்வே காவல் ஆய்வாளா் பத்மாகுமாரி தலைமையில் போலீஸாா் எழும்பூா், நுங்கம்பாக்கம், கடற்கரை, பூங்கா, சேத்துப்பட்டு உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், எழும்பூா் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை பூங்கா ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடற்கரை- செங்கல்பட்டுக்கு சென்ற ரயிலில் இருந்து இறங்கி வந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து, அவரது பையை போலீஸாா் சோதித்தபோது அதில் 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.46 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவா் வேலூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த ஏழுமலையின் மனைவி தேவி(24) என்பதும், ரயில்களில் பெண் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT