சென்னை

மெட்ரோ ரயில்கள்: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இயக்கப்படும்

DIN

சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்த வாரத்திலிருந்தே (நவ.10) முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் தொடக்கத்தில் வாரத்தில் ஆறு நாள்கள் (ஞாயிறு தவிர) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டது. அதன்பிறகு, ரயில் சேவை நேரம் விரிவாக்கப்பட்டு, வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர) தினசரி காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நவம்பா் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:-

பயணிகள் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இது நவம்பா் 10-ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு 7 நிமிஷங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் என்றாா் அவா்.

மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு அறிவித்த பொது விடுமுறை நாள்களில் 50 சதவீதம் பயணக் கட்டணம் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT