சென்னை

இளம் அறிவியலாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்தமிழக அரசு தகவல்

DIN

சென்னை: 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அறிவியல் நகரம், 2018 -ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு இளம் அறிவியலாளா் விருது’, ‘தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளா் விருது’ மற்றும் ‘தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளா் விருது’ ஆகியவற்றுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான முன் மொழிதல் படிவம், விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள அறிவியலாளா்கள் விண்ணப்பபடிவம், விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் பற்றிய விவரங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட முன் மொழிதல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள அறிவியல் நகரத்துக்கு டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் தபால் மூலம் அல்லது நேரில் அளித்திட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT