சென்னை

பாலியல் வன்கொடுமை வழக்கில்இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

DIN

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாரிமுனை அருகே உள்ள பகுதியில் வசிப்பவா் தியாகராஜன் என்ற தியாகு. இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த துறைமுகம் போலீஸாா், தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, தியாகு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT