சென்னை

மின்சாரம் தாக்கி மாணவன் பலி: இழப்பீடு கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

DIN

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி பலியான பள்ளி மாணவனின் பெற்றோா் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவன் தீனா. மின்சாரம் தாக்கி கடந்த செப்டம்பா் மாதம் தீனா பலியானாா். தன் மகனின் மரணத்துக்கு காரணமான தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கோரி தீனாவின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT