சென்னை

இன்று முதல் சென்னைக்கு 650 எம்எல்டி குடிநீர் விநியோகம்

DIN


சென்னை மாநகருக்கு புதன்கிழமை முதல் 650 எம்எல்டி குடிநீர் வழங்கப்படும் என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் வழங்கலை சீராக்க கிருஷ்ணா நீரை வழங்கக் கோரி தமிழக முதல்வரால், ஆந்திர முதல்வருக்கு கடந்த ஆக.7-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. இதன் பேரில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாக விடுவிக்குமாறு ஆந்திர முதல்வர் உத்தரவிட்டார். 
அதன்படி, சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கண்டலேறு அணை, கடந்த மாதம் 25-ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர், கடந்த 28-ஆம் தேதி பூண்டி நீர்தேக்கத்தை  வந்தடைந்தது. 
மேலும், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உயர்ந்து வரும் ஏரிகளின் நீர் அளவைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னை நகருக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீரின் அளவு  புதன்கிழமை முதல் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் அளவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT