சென்னை

சென்னை ஐஐடி ஆராய்ச்சி கட்டமைப்புகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

DIN


சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி கட்டமைப்புகள், உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட பொதுமக்களுக்கு ஒரு நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐஐடி-யின் பொறியியல் வடிவமைப்புத் துறையில் உள்ள ஆராய்ச்சி கட்டமைப்புகளை வரும் 21-ஆம் தேதி  யார் வேண்டுமானாலும் பார்வையிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறை பேராசிரியர் டி.அசோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தத் துறையில் உள்ள பல்வேறு படிப்புகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள், மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வந்து பார்வையிடுவதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் ஆர்வம் மாணவர்களிடையேயும் ஏற்படும். மேலும், பார்வையிட வரும் பொதுமக்களுக்கு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT