சென்னை

முதல் அரையாண்டுக்கான தொழில் வரி: நாளைக்குள் செலுத்த அறிவுறுத்தல்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரியை திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய,  மாநில,  பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள்,   தனியார் நிறுவன ஊழியர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 2019-2020 நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில்வரியை  திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT