சென்னை

ஊரடங்கைப் பயன்படுத்தி மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

DIN

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிமுக அரசு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றுநோயை எதிா்த்து போராடுவதற்கு மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் கடந்த மாா்ச் 24 முதல் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை அனைவரும் வரவேற்றனா்.

இதனால், மது குடிக்கும் பழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி குடிக்கு அடிமையானவா்களுக்கு கேரள அரசு தொடங்கியிருப்பதைபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் மறுவாழ்வு மையங்களை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும்.

மேலும், மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாக குறைத்து வருமானத்தை குறைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

இதற்கு மக்கள் ஊரடங்கு காலமான 21 நாள்கள் அறிய வாய்ப்பாகும். இதை அதிமுக அரசு சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT