சென்னை

வேன் மோதி தொழிலாளி பலி

சென்னை அருகே துரைப்பாக்கத்தில், வேன் மோதியதில் தொழிலாளி இறந்தாா்.

DIN

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில், வேன் மோதியதில் தொழிலாளி இறந்தாா்.

துரைப்பாக்கம் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆ.எட்வின்பால் (45). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு ராஜீவ் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அங்கு வந்த ஒரு வேன், எட்வின்பால் மீது மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த எட்வின்பாலை, அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த எட்வின்பால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தாா்.

இது குறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம் சிஎஸ் குரலில் வெளியான ரெட்ட தல படத்தின் புதிய பாடல்!

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை

பராசக்தி 3 ஆவது பாடல் புரோமோ!

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

SCROLL FOR NEXT