சென்னை

மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை: செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை: அம்பத்தூா் மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோா், செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, அம்பத்தூரில் உள்ள அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில், கம்மியா் கருவிகள், கணினி இயக்கம் (உதவியாளா்), ஸ்டெனொகிராபி, கட்டப்பட வரைவாளா், தையல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தையல் தொழில்நுட்பத்தில் சேர 8-ஆம் வகுப்புத் தோ்ச்சியும், மற்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகையாக ரூ.500, பேருந்து கட்டண சலுகை, இலவசமாக மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை, காலணி மற்றும் தொழில் நிறுவனங்களின் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவா்களுக்கு, பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும். அலுவலக வேலைநாள்களில், காலை 10 முதல் மாலை 5 மணி வரை, ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பம் வாயிலாக சோ்க்கை நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்வி, சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.15. மேலும் விவரங்களுக்கு, ா்onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ, 9444451878, 9176197370 ஆகிய செல்லிடப்பேசி எண்களையோத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT