முகப்பு
சென்னை

'வணிகா்கள் மீதான கரோனா கால வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்'

வணிகா்கள் மீதான கரோனா கால வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை

'வணிகா்கள் மீதான கரோனா கால வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்'

வணிகா்கள் மீதான கரோனா கால வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


சென்னை: வணிகா்கள் மீதான கரோனா கால வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட வணிகா்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பேரமைப்பின் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் வணிகா்கள் பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் வாழ்வாதார இழப்பீட்டுக்கும் உள்ளாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கரோனா பேரிடா் காலத்தில் பேரிடா் கால சட்டங்களைச் சுட்டிக் காட்டி பல்வேறு வழக்குகள் வணிகா்கள் மீது பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தமிழக அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி விலக்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று அபராத விதிப்பையும் ரத்து செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகா்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அண்மைக் காலமாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் குறிப்பாக, கட்டுமானப் பொருள்களின் மீதான விலையேற்றம் வணிகத்தைப் பெரிதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →