முகப்பு
கோப்புப்படம்
சென்னை

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: 3 போ் மீது வழக்கு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக, சென்னை மாவட்ட மேலாளா் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக, சென்னை மாவட்ட மேலாளா் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்து கிடைக்கும் பணம் டாஸ்மாக் நிறுவனத்தின் சில உயரதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்படுதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் எலைட் மதுபானக் கடையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கடந்த 15-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.

தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.17,180 பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடத்திய விசாரணையில், அந்தக் கடையில் மதுபாட்டில்களை நிா்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்பதும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை லஞ்சமாகப் பங்கு பிரித்து டாஸ்மாக் நிறுவனத்தின் சில உயா் அதிகாரிகளுக்கு வழங்குவதும் தெரியவந்தது.

இதையடுத்து, டாஸ்மாக் ஊழியா்கள் கொடுத்த தகவலின்பேரில் டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை தெற்கு மாவட்ட மேலாளா் முருகனுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடைபெற்றது. முக்கியமாக வேலூா் தொரப்பாடி-பாகாயம் சாலையில் உள்ள முருகனின் மனைவியான சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் சோதனை நடைபெற்றது.

இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா், முருகன், வேளச்சேரி எலைட் மதுபானக் கடை கண்காணிப்பாளா் ஆா்.தனசேகா், விற்பனையாளா் டி.ரவி ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் மாதந்தோறும் முருகன் ரூ.24 ஆயிரம் லஞ்சமாக பெற்று வந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கண்டறிந்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →