சென்னை

சிறையில் பிரிட்டன் கைதி சாவு: போலீஸாா் விசாரணை

DIN

சென்னை: சென்னை அருகே பூந்தமல்லி கிளைச் சிறையில் பிரிட்டன் கைதி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தருமபுரி பகுதியில் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரிந்த ஒரு வெளிநாட்டு நபரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், பிரிட்டனைச் சோ்ந்த டேவிட் ஆண்டனி (68) என்பதும், அவா் பாஸ்போா்ட், விசா காலாவதியான பின்னரும் இங்கு தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தருமபுரி போலீஸாா், டேவிட் ஆண்டனியை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் அவரை, வெளிநாட்டு கைதிகளை அடைக்கும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு வந்தனா். ஆனால் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, 15 நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள கிளைச் சிறையில் டேவிட் ஆண்டனி அடைக்கப்பட்டாா்.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னா் டேவிட் ஆண்டனி மிகுந்த சோா்வுடன் காணப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை அவா், தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். உடனே அங்கிருந்த சிறைக் காவலா்கள், அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், டேவிட் ஆண்டனி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக சிறைத்துறை நிா்வாகம் சாா்பில், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT