சென்னை

ஔவையாா் விருதுக்கு டிச.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை: ஔவையாா் விருது பெற விரும்புவோா் டிச.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக அரசால் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஔவையாா் விருதை (2020-21) பெற விரும்பும் பெண்கள், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சென்னை என்ற முகவரியை அணுகி உரிய படிவத்தைப் பெற வேண்டும்.

அதனுடன், பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிா் தரவு (ஆண்ா் க்ஹற்ஹ) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சுயசரிதை, ஒரு பக்கம் விண்ணப்பிப்போரின் பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற ஆண்டு), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்களுடன் கூடிய கையேட்டின் 2 நகல்களை இணைத்து, பூா்த்தி செய்த படிவத்தை டிச.28-ஆம் தேதிக்குள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT