சென்னை

பிச்சையெடுத்த மேலும் 10 குழந்தைகள் மீட்பு

DIN


சென்னை: சென்னையில் பிச்சையெடுத்த மேலும் 10 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனா்.

சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, சிறுவா் நல பாதுகாப்புப் பிரிவு ஆகியவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக பொதுஇடங்களில் பிச்சையெடுக்க வைக்கப்படும் குழந்தைகளை மீட்டு வருகின்றனா். ஒரு வாரத்தில் பிச்சையெடுத்த 13 குழந்தைகள் மீட்கப்பட்டனா். இந்நிலையில் சோழிங்கநல்லூா்,செம்மஞ்சேரி, மயிலாப்பூா் பகுதிகளில் பொதுஇடங்களில் இப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

இச் சோதனையில் பொதுஇடங்களில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 10 குழந்தைகளை மீட்டனா். மீட்கப்பட்ட குழந்தைகள் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT