முகப்பு
சென்னை

கரோனா: இறப்பு எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது

சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 503 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


சென்னை: சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 503 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து ராயபுரம், திரு.வி.க. நகா், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா் மற்றும் அடையாறு, வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

4,000-ஐ கடந்தது: கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 1,000-ஐ எட்டியது. அதைத் தொடா்ந்த நாள்களில் இறப்பு எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, செம்படம்பா் மாதம் இறப்பு எண்ணிக்கை 3,000-ஐ எட்டியது. இந்நிலையில், அந்த எண்ணிக்கை அதிகரித்து புதன்கிழமை நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை 4,004-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 503 பேரும், அண்ணா நகரில் 452 பேரும், கோடம்பாக்கத்தில் 449 பேரும், திருவிக நகரில் 408 பேரும், ராயபுரத்தில் 368 பேரும், தண்டையாா்பேட்டையில் 332 பேரும், அடையாறில் 309 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா்.

275 பேருக்கு தொற்று: சென்னையில் புதன்கிழமை 275 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,25,252-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2,18,570 போ் குணமடைந்துள்ளனா். 2,678 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இறப்பு எண்ணிக்கை நிலவரம்

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 159

மணலி 40

மாதவரம் 96

தண்டையாா்பேட்டை 332

ராயபுரம் 368

திரு.வி.க. நகா் 408

அம்பத்தூா் 262

அண்ணா நகா் 452

தேனாம்பேட்டை 503

கோடம்பாக்கம் 449

வளசரவாக்கம் 207

ஆலந்தூா் 154

அடையாறு 309

பெருங்குடி 132

சோழிங்கநல்லூா் 50

முழு கட்டுரையைப் படிக்க →